Followers

Tuesday 17 April 2012

மங்கையர்கரசியார்

மங்கையர்கரசியார் ,.பாண்டிய மன்னனின் மனைவி, சமண மதத்தினரால் அரசனுக்கும் நாட்டுக்கும் ஏற்பட்ட துன்பங்களிலிருந்தும் மீட்க எடுத்த சில முயற்சிகளை நாயன்மார் கதைகளில் படித்தேன். அவரை பற்றி பரவலாக பேசப்படவில்லை. அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் தோழரே .. சாவித்ரியும் சீதையும் கண்ணகியும் பெண்களின் ஒழுக்கத்திற்கு ஒற்றை மூலியாக வலம் வரும் போதும் இவரை போன்றவர்கள் ஏன் மறைந்திருக்கிறார்கள் ? 

3 comments:

  1. என்ன பெரிசா காரணம் இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்?
    அவர் பெண்பால் என்பதைத் தவிர!

    நம்ம பேரரசன் ராஜராஜ சோழன் கூட அவன் தமக்கையார் குந்தவியின் அறிவுரைகளைக் கேட்டதாக
    சொல்வார்கள், குந்தவி பற்றி ராஜராஜ சோழன் நாடகத்தில் பார்த்தது தவிர ( திரைப்படமும் வந்தது!
    நினைவிருக்கா..!) நமக்கெல்லாம் என்ன தெரியும்?

    அதை எல்லாம் விடுங்கள் தோழரே
    தாஜ்மஹாலை மும்தாஜுக்காக ஷாஜஹான் கட்டினார்,
    உலக அதிசயத்தில் ஒன்று என்று சொல்லிக்கொண்டே இருக்கிறோமே தவிர மும்தாஜைப் பற்றி என்ன தெரியும்? அவள் அழகி மட்டுமல்ல, அரசனுக்கு
    அரசாங்க காரியங்களில் உதவிய அறிவுசார்ந்தப் பெண்ணாக இருந்திருக்கிறாள். இதெல்லாம் சொல்லவே மாட்டார்கள், பதிவும் இருக்காது.

    ReplyDelete
  2. but kannagi is still in our consciousness , seethai , savithri are there in this embedded electronic world.. VHP to BJP are caring and carrying them to generations... Here am doubting the religious socio politics of our era men.

    ReplyDelete
  3. KANNAGI STILL IN OUR CONSCIOUSNESS! AGREE WITH U?

    BUT என்னவாக இருக்கிறாள்? கற்புக்கரசி என்ற அடையாளத்துடன் அல்லவா?

    அரசவையில் வாதாடிய பெண்ணாகவாக அவள் நம்மில் இருக்கிறாள்!
    அங்கேயும் பாருங்கள்... கற்பும் கத்திரிக்காயும்தான் முதலிடத்தில் வருகிறது

    ReplyDelete