<iframe width="560" height="315" src="http://www.youtube.com/embed/f8YIrepnJy0" frameborder="0" allowfullscreen></iframe>
இது நம்ம ஊரு கரகாட்டம்/ரெகார்ட் டான்ஸ் மாதிரியா?
நம்ம ஊரு டான்ஸ்களையும் கொஞ்சம் இந்த மாதிரி புரமோட்
பண்ணக் கூடாதா? -மாதவி.
மீரா:
தோழீ, இது நம்ம ஊரு ஆட்டங்கள் மாதிரி கிடையாது. இது பிரெஞ்சு மூலம் வந்த ஒரு அருமையான மேடை கலை. கவிதைகளுக்கும் இலக்கிய எழுத்துக்களுக்கும் ஆன உடல் மொழியாக தொடங்கிய இந்த கலை பிறகு நகைச்சுவை கலர்ந்து மேடையில் வந்தது. ஒரு கேரிகேச்சர் ஆக. சமூகத்தின் பலபல பிரச்சினைகளும் பாரடிகளாக(Parody ) இப்படி வந்திருக்கிறது. சில்விய பிளாத்தின் கவிதைகள் கூட இந்த பர்லஸ்கு நடன கலை வழியாக மேடையில் அரேங்கேறியிருக்கிறது. மட்டுமல்ல. இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதிகளில் எப்பொழுதோ இந்த கலை அமெரிக்காவில் தடை செய்யப்பபட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு பெண்ணுடலை கொண்டாடும் ஒரு கவிதை காட்சியாக இது மெருக்கேறி உலாவருகிறது. "உறுப்புக்கள் ஒவ்வொன்றும் அழகானவை. அவையில் உணர்வுகள் படியும்போது அவை பேசுகிறது. கொஞ்சுகிறது நடனம் ஆடுகிறது. அழுகிறது. சிரிக்கிறது.. இது தான் பெண்ணுடல். உங்களை பேணுபவளும் காதலிப்பவளும் காமிப்பவளும் ஆன பெண் இந்த உறுப்புக்கள் வழியாக தான் ஆன்மாவை உங்கள் முன் வைக்கிறாள் . அதை சிதைக்காதீர்கள் "என்ற அழுத்தமான கருத்துடன் மேடையேறிய ஆயிரக்கணக்கான பர்லஸ்கு நடன கலைஞர்கள் மேற்கத்திய நாடுகளில் எங்கும் இருந்திருக்கிறார்கள். இருக்கிறார்கள்.

உடலில் இருந்தும் ஆடைகளை களைந்து இறுக்கமல்லாத ஒரு மனநிலையில் அந்த பெண்கள் ஆடி உணரவைக்கிறார்கள். அருமையான ஒரு கருத்து. இல்லையா.
நம்மூர் பண்பாட்டு கலைக்கும் இதற்கும் ரொம்ப தூரம். சில விஷயங்களில் வெள்ளையர்கள் நம்மை விட அறிவார்ந்தவர்கள். பல பொழுதும் அவர்கள் பரிணாம ஏணியில் நம்மை விட ஒரு படி மேலே இருக்கிறார்கள் என்பது உண்மை என்று கூட தோன்றுகிறது. ...
மீரா
அற்புதமான விளக்கம் தோழரே.
ReplyDeleteநம்ம ஊரு ஆட்டத்தில் பெண்ணின் உடல் ஒரு கேளிக்கைப் பொருளாக, அவள் ஒரு கோமாளியாக,
காம இச்சையைத் தூண்டும் கனியாக பரிமாறப்படுகிறது.
ஆனால் இந்த ஆட்டத்தில் அந்தப் பெண்கள் தங்கள் உடலைக் கொண்டாடுகிறார்கள். அதுவும், ஒரு மகாராணியைப் போல பெருமையுடன்!
இந்தப் பெருமை நம் கரகாட்டம் ஆடும் பெண்ணின் உடல் அசைவில் ஏன் இல்லை? யோசிக்க வேண்டிய
விசயம்.